மாணவி முன் சுயஇன்பம் கண்ட ஆண்- பின்னர் நடந்த விபரீதம்

காஞ்சிபுரத்தின் பிரபல கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டல் வார்டன் ஒருவர் கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனத்தில் போராட்டம் நடத்தியதாக தெரியவருகிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஒரு மாணவியிடம் ஹாஸ்டல் ஸ்டாப் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதால் மாணவியர் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில் வார்டனாக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் ஹாஸ்டல் பெண் லிப்டில் மேல் தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது அவர் முன்னிலையில் லிப்டினுள்ளேயே சுய இன்பம் கண்டிருக்கிறார்.

நான்காம் தளத்தில் கீழே இறங்க அந்த பெண் லிப்டில் பட்டன் அழுத்தி இருக்கிறார்.

லிப்டினும் நுழைந்த ஹாஸ்டல் வார்டன் ஆறாம் தளத்தில் இறங்க பட்டனை அழுத்தி இருக்கிறார்.

ஆனால் எட்டாம் தளம் செல்லும் வரையில் அந்த பெண்ணை வெளியேற விடாமல் அவரை தடுத்து நிறுத்தி சுய இன்பம் கண்டார் அந்த வார்டன்.

பிறகு மாணவி கத்தி கூச்சலிட்டதை அடுத்து அவரை லிப்டில் இருந்து வெளியேற விட்டதாக அந்த பெண் மாணவி என்.டி.டி.வி செய்திகளில் கூறி இருக்கிறார்.

இந்த சம்பவத்தையொட்டி கல்லூரி நிறுவனம் இதற்கு காரணம் அந்த பெண் மாணவி உடுத்தி இருந்த முறையற்ற உடை தான் காரணம் என்று கூறி இருக்கின்றனர்.

மாணவிகள், மேனேஜ்மென்ட் தங்கள் புகாரை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் இப்படியான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை அல்ல இதற்கு முன் ஒரு ஆடவர் ஸ்டாப் எங்கள் அறைக்குள் சிறுநீர் கழித்தார் என பெண் மாணவியர் தலைவி கூறி இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]