மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியருக்கு இப்படி ஒரு நிலைமையா- அதிர்ச்சி வீடியோ உள்ளே

மகாராஷ்டிராவில் பள்ளி மாணவியிடம் காதலை தெரிவித்த ஆசிரியரை, சக மாணவர்கள் அடித்து, உதைத்தனர்.

நாசிக் நகரில் இயங்கிவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், தனது மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தனது நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவர்கள், அந்த ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவர்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]