மாணவர், ஆசிரியர்களுக்கு “டெப்” வழங்கும் திட்டத்தை நிறுத்தினார் ஜனாதிபதி

உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணினிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார்.

உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் டெப் கணினிகளை வழங்கப் போவதாக கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தின் கீழ், தலா 27 ஆயிரம் ரூபாய் பெறுமதியான டெக் கணினிகளை 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் வழங்குவதற்கான வழங்குனரை அமைச்சரவை தெரிவு செய்திருந்தது.

இந்தத் திட்டத்துக்காகத் தேவைப்படும் 4 பில்லியன் ரூபாய் நிதியை வேறு கூடிய பயனுள்ள திட்டத்துக்கு செலவிடும் நோக்கிலேயே இதனை இடைநிறுத்தி வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த திட்டத்தை இடைநிறுத்த அமைச்சரவை நேற்று முடிவெடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]