மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை வீச்சு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை வீச்சு மேற்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் வைத்து இந்த கண்ணீர்புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, இவ்வாறு கண்ணீர்புகை வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளையை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]