மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 11 மாணவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிக்கு மாணவர் ஒருவர் உள்ளிட்ட மேலும் 11 மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை தோற்றுவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உட்பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

2016/2017ஆம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பௌத்த சமயம் மற்றும் பௌத்த ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]