மாணவர்களுக்கான இலவச சீருடை கூப்பன்கள் மார்ச் மாதம் விநியோகிக்கப்படும்

தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச சீருடை கூப்பன்கள் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் அரச பாடசலைகளுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலவச சீருடை வழங்கப்படாமையினால் தரம் ஒன்றுக்கு சேர்க்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]