மாணவருக்கு ரூ.2 இலட்சம் காப்புறுதி

மாணவருக்கு ரூ 2 இலட்சம்

பாடசாலை மாணவர்களுக்கு ரூ.2 இலட்சம் காப்புறுதி வழங்கும் திட்டம் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். அரசாங்க பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்விகற்கும் சகல மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி வழங்கப்படவிருப்பதாவும், இதனை ஆரம்பிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரும் செயற்பாடுகள் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு புதிய காப்புறுதித்  திட்டம் மூலம் நாட்டில் உள்ள 45 இலட்சம் மாணவர்கள் நன்மை அடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.