மாணவன் துஷ்பிரயோகம் சம்பந்தமாக தலைமறைவாகியிருந்த ஆசிரியர் பொலிஸில் சரண்

மாணவன் துஷ்பிரயோகம்

மாணவன் துஷ்பிரயோகம் சம்பந்தமாக தலைமறைவாகியிருந்த ஆசிரியர் பொலிஸில் சரணடைவு

மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் கடந்த 13.01.2018 அன்று இடம்பெற்றதாகக் கூறப்படும் மாணவன் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர் செவ்வாய்க்கிழமை 23.01.2018 ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஏறாவூரிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் 13 வயது சிறுவனான மாணவன் சனிக்கிழமை (13) குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]