மாணவனின் காதை கடித்து குதறிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

பாடசாலை மாணவன் ஒருவனின் காதைக் கடித்துக் குதறிய பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்ற பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். பலாங்கொடை மொரஹெல பகுதியில் இச்ச ம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினம் சந்தேக நபரான பெண்ணின் மகள் கல்வி கற்கும் பாடசாலையைச் சேர்ந்த சம வயதுடைய மாணவன் ஒருவன் சந்தேக நபர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேக நபர் வீட்டுக்கு வரும் வேளையில் தனது மகள் வீட்டினுள் இருந்த அதே சமயம் அவரது பாடசாலை வகுப்பு சகாவான குறிப்பிட்ட மாணவரும் கதவை மூடிய நிலையில் வீட்டினுள் இருந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சந்தேக நபரான பெண்ணுக்கும் அம்மாணவனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சந்தேக நபரான பெண் அம்மாணவனின் காதை கடித்து ஒரு பகுதி வேறாகும் வகையில் கடித்துக் குதறியுள்ளார்.

காதின் ஒரு பகுதியை இழந்த மாணவன் இரத்தம் கொட்டிய நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரான பெண்ணை பொலிஸார் கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]