மாணவனால் தயாரிக்கப்படும் ரொக்கட் விரைவில் விண்ணில்

மாணவனால் தயாரிக்கப்படும் ரொக்கட் விரைவில் விண்ணில்

மாணவனால் தயாரிக்கப்படும் ரொக்கட்டுக்கு ஆதரவு வழங்கியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். மற்றும் அம்மாணவனின் முயற்சிக்கு முழு ஆதரவவை வழங்கவும் ஜனாதிபதி முன்வந்துள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மாணவனின் திறமையை நேரில் பார்வையிட்டு இக்கருத்தினை வெளியிட்டார்.

அப் பாடசாலையில் இடம்பெற்ற X-Ban கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி இக்கருத்தினை தெரிவித்தார்.அத்துடன் மாணவர்களின் திறமைகளை உலகிற்கு கொண்டு செல்லும் இந்த கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி மாணவர்களின் திறமையை பாராட்டியிருந்தார்.

ரொக்கட் ரொக்கட்

கிஹான் ஹெட்டிஆராச்சி என்ற மாணவன் தயாரித்த ரொக்கட்டை விண்ணுக்கு செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

விரைவில் அம்மாணவனின் தயாரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]