மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்: சிமோனா ஹாலெப் “சாம்பியன்”

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் கிறிஸ்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார்.

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நாட்டில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா), 17ஆம் நிலை வீராங்கனை கிறிஸ்டினா மடெனோவிச்சை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிமோனா ஹாலெப் 75, 67 (57), 62 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். அமெரிக்கா வீராங்கனை செரீனா வில்லியம்சுக்கு (2012, 2013) பிறகு இந்த போட்டியில் தொடர்ந்து ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை சிமோனா ஹாலெப் பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் ஜோகோவிச்5ஆவது இடத்தில் உள்ள ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள். இதில் ரபெல் நடால் 62, 64 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் கடந்த 7 ஆட்டங்களில் தொடர்ந்து ஜோகோவிச்சிடம் கண்ட தோல்விக்கு ரபெல் நடால் முற்றுப்புள்ளி வைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]