மாசி மாதம் 09ஆம் திகதி சி3 வெளியிடப்படவுள்ளது!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் முதல் இரண்டு பாகங்கள் குறிப்பிட்ட திகதியில் வெளியிடப்படடன. இப்படத்தின் 3ம் பாகம் சி 3 எனும் பெயரில் உருவாகி நிறைவடைந்து கடந்த ஆண்டே வெளியிட தயாராகிவிட்டது.

ஆனால் வெவ்வேறு காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வருகின்றது. கடந்த தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டபோது சூர்யா தம்பி கார்த்தி நடித்த கஷ்மோரா வெளியானதால் அப்படத்துக்கு போட்டியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக சி 3 தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்த போது தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா படம் வெளியிடப்பட்டதால் அதன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக சி3 பட வெளியீடடை தள்ளிவைக்கப்படும்படி ராம் சரண் தரப்பில் சூர்யாவிடம் கேட்கப்பட்டது.

அதை ஏற்று தள்ளிவைத்தார். பொங்கல் தினத்தில் வெளியிட எண்ணியபோது விஜய்யின் பைரவா வெளியானதால் நட்பு ரீதியில் சி3 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ஒருவழியாக குடியரசு தினத்தன்று வெளியிட முடிவு செய்யப்பட்டு வெளியீட்டுக்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம், போலீஸ் தடியடி என்ற நிலைமை உருவானதால் இந்த நேரத்தில் படத்தை வெளியிடவில்லை. இந்நிலையில் மாசி 9 ஆம் திகதி சி3 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.