மாங்குளத்தில் மிதிவெடி வெடித்து நபர் ஒருவர் பலி: அதிர்ச்சியில் மனைவி தற்கொலை முயற்சி

மாங்குளம் பிரதேசத்தில் மிதிவெடி அகற்றும் பணியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிழந்த நபரின் மனைவியும் விஷம் அருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எனினும் அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும், அவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாங்குளம் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மிதிவெடி அகற்றும் பணிகள சர்வதேச நிறுவனமொன்றின் கீழ் நடைபெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு உயிரிழப்புகள் நடந்தேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]