மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றம் – சபாநாயகர் கரு ஜயசூரிய

மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்ற நிலையியல் சட்டங்களுக்கு அமைவாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் வாக்கெடுப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் செயற்பாடு தொடர்பில் மக்கள் மத்தியில் போலியான கருத்து நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளித்த போதே சபாநாயகர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

முற்றுபெறாத திருத்த சட்டமூலத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு குறிப்பிடத்தக்க கால அவகாசம் தேவைப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.