மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை

மாகாண சபைத் தேர்தல்
Kabir Hashim

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட, மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்ட மூலம் குறித்து தமிழ் முஸ்லிம் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு, மட்டக்களப்பில், சனிக்கிழமை (23) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்ப தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் கபீர் ஹாசிம் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

“அரசமைப்பின், 20ஆவது திருத்தம், மாகாண சபை தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட போது அவை தொடர்பில், சிறுபான்மைக் கட்சிகள் சில அந்த சட்டத்தில் திருத்த வேண்டிய விடயங்கள் சேர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் கருத்துகளையும் முன் வைத்தன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அந்த ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு அதற்கமைவாக, அதனை திருத்துவதற்கு எமது அரசாங்கம் மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்ததுடன் எல்லோரும் திருப்தியடையக் கூடிய மாதிரி அனைவரின் ஆலோசனையையும் பெற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அந்த திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்கினால் நிறைவேற்றப்பட்டது. அது பெரும் வெற்றியாகும். இது நமது நாட்டுக்கு ஒரு பெரும் வெற்றியாகும்”என்றார்.