முகப்பு News Local News மாகாண சபைகள் சட்டத்திற்கு எதிரானது – ஜே.வி.பி

மாகாண சபைகள் சட்டத்திற்கு எதிரானது – ஜே.வி.பி

மேல் மாகாண சபையின் பல்வேறு பதவிகள், மாகாண சபைகள் சட்டத்திற்கு எதிரானது என்பதோடு, அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது சட்டவிரோதமானது என்றும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு காணக்காய்வாளர் நாயகத்திடம் இன்று ஜேவிபியினால் முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியின் மேல்மாகாண சபை உறுப்பினர்கள் குழு ஒன்று, இன்று இதுதொடர்பான மனு ஒன்றை கணக்காய்வாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளது.

இந்த மனுவில், மேல் மாகாண சபை எதிர்கட்சித் தலைவர், தவிசாளர், ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர், எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகிய பதவிகள் தொடர்பில் கணக்காய்வு மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com