மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அந்தஸ்து ஒருபோதும் குறையாது

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் அந்தஸ்து ஒருபோதும் குறையாது.

மாகாண சபைகளுக்கு

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலமாக மத்திய அரசாங்கத்திலுள்ள நாடாளுமன்றத்தின் அந்தஸ்து ஒருபோதும் குறையாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைக் பகிர்வதால் நாடாளுமன்ற அதிகாரம் இல்லாமற்போய் விடும் என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியிருப்பது பற்றி கருத்து வெளியிடும்போது செவ்வாய்க்கிழமை 31.10.2017 அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரிவித் அவர் மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மாகாணங்களிடம் கையளிப்பது எவ்விதத்திலும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை குறைப்பதாக அமையாது.

மாகாணங்களுக்கே உரித்தான பல அதிகாரங்களை மாகாணங்களின் விருப்புக்களுக்கு அப்பால் பலாத்கராமாக மத்திய அரசு கைப்பற்றிக் கொண்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்று சொல்வதற்கு மாகாண சபைகள் ஒன்றும் சட்ட விரோதமான நிறுவனம் அல்ல.

இதனை முட்டாள்தனமாக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தை விட மாகாண சபையில் ஜனநாயக ரீதியிலும் மக்களாட்சிக் கோட்பாட்டு ரீதியிலும் 100 வீதம் மாகாண சபை உறுப்பினர்கள் மக்களின் வாக்குகளாலேயே தெரிவாகின்றனர்,

ஆனால், நாடாளுமன்றத்தின் 29 உறுப்பினர்கள் மக்களால் அல்லாமல் தேசியப்பட்டியல் மூலமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஆகவே மாகாண சபைகளை, அதன் ஜனநாயகத்தை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதன் ஊடாக தாம் பாராளுமன்றத்தில் இருந்தும் செயற்திறன் அற்றவர்கள் என்பதை மக்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும் என்பதனாலேயே அவர்கள் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என திராணியற்ற அரசில்வாதிகள் கூக்குரலிடுகின்றார்கள்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதனூடாக மீண்டும் பயங்கரவாதம் உருவாகும் என கூறுபவர்களே நாடாளுமன்றத்துக்கு 150 குண்டுகளையேனும் வைக்கலாம் எனும் குண்டு வைக்கும் திட்டத்துடன் செயற்படுகின்றார்கள்.

பயங்கரவாதிகள் தாங்களே என அவர்கள் தங்கள் கருத்துக்களினூடாக வெளிக்காட்டி நிற்கின்றனர்.

முட்டாள்தனமான கேலிக் கருத்துக்களை கூறுபவர்களை கருத்திலெடுக்காமல் அரசாங்கம் மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்கும் பொறிமுறையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]