மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம்

மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் எஸ்கோ கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்றது

சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையகம், இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கையகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம்.சேனாரத்ன, சட்டத்தரணி ஸம்ருத் ஜஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டு விளக்களித்தனர்.

மாகாணசபைத் தேர்தலில் 25 சதவீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமா? பேண் பிரதிநிதித்துவத்தின் சாதக. பாதகங்கள், உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் 25 சதவீதமான உள்வாங்கப்பட்டார்களா என்பது தொடர்பவாக விரிவாக கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகளும் பெறப்பட்டன.

மாகாணசபை

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கட்சிகளினால் வட்டார ரீதியாக பெண்களக்கு சரியான இடங்கள் வழங்கப்படாமை தொடர்பாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பெண்கள் எதிர்காலத்தில் தமது அரசியில் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தமது பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்கவும் மாகாண சபையில் 25 சதவீதமாக பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]