மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை விளக்கம் தெரியாத சிலர் எதிர்க்கிறார்கள் – ஞானமுத்து ஸ்ரீநேசன்

மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமானது மாகாணசபையின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதுமல்ல ஆயுட்காலத்தை நீடிப்பதுமல்ல என்ற விளக்கம் தெரியாத சிலர் இந்த சட்ட மூலத்தை எதிர்க்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல்

பெண்களுக்கு 25 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது முற்போக்கான திட்டமாகும். பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் பாராளுமன்றத்தில் 5 அல்லது 6 சதவீதமான பெண்கள் பிரதிநித்துவம் மாத்திரமே உள்ளது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழக மைதானத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தல்

அவர் தொடரந்து உரையாற்றுகையில் – மாகாணசபைத் தேர்தலில் 50 சதவீதம் தொகுதி அடிப்படையிலும் 50 சதவீதம் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு நடைபெறவேண்டும், பெண்களுக்கு 25 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நல்ல விடயம் நாங்கள் எதிர்கட்சியில் இருப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்க முடியாது. இதற்கு எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தார்கள்.

மாகாணசபைத் தேர்தல் முறை திருத்தச் சட்டமானது மாகாணசபையின் அதிகாரத்தைக் குறைப்பதுமல்ல சபையின் ஆயுட்காலத்தை நீடிப்பதுமல்ல என்ற விளக்கம் தெரியாதவர்கள் சிலர் இந்த சட்ட மூலத்தை எதிர்க்கிறார்கள்.

மாகாணசபைத் தேர்தல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் ஆதரவை வழங்கியிருந்தோம். திருத்தம் தொடர்பான விளக்கம் இல்லாத சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. இருவர் வந்துவிட்டு வெளியில் போயுள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிலான கூட்டு எதிரணியிலுள்ள 37 பாராளுன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள் தொழில் வழங்கும் போது பணம் பெறுதல், அல்லது ஒப்பந்தங்கள் செய்யும் போது தரகு பெறுதல், போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், எங்களது கவனத்துக்கு கொண்டுவரும்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப்படும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]