மஹியங்கனையில் லொறி சாரதியால் 6 வயது சிறுவன் உடல் நசுங்கி பரிதாப பலி!!

மஹியங்கன, பகரகம்மான வீதியில் மெதஒய பகுதியில் நேற்று (19) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மணல் ஏற்றி வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஹியங்கன பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கன, தும்வத்த பகுதியை சேர்ந்த ஆர்.எம் தனுக தனஞ்சய எனும் மெதஒய வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

விபத்து ஏற்பட்டவுடன் லொறி ஓட்டுனர் லொறியை நிறுத்தாது நேரடியாக மஹியங்கன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் நடந்தவுடன் மெதஒய மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர் மக்கள் அனைவரும் பாதையை வழிமறித்து சிறுவனின் சடலத்தை பாதுகாத்தனர்.

அத்துடன் பொலிஸார் முன்னிலையில் அப்பாதையால் பயணிக்கும் லொறி ஓட்டுனர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையில் பரபரப்பான நிலை ஒன்று ஏற்பட்டது.

உயிரிழந்த சிறுவனுக்கு ஒரு சகோதரி உள்ளதுடன் தந்தை இராணுத்தில் சேவை செய்கிறார்.

விபத்து தொடர்பில் மஹியங்கன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]