‘மஹிந்த ராஜபக்ஷ’வுக்கு ஆந்திரமுதல்வர் வரவேற்பளிக்க எதிர்ப்பு

மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை அங்கு செல்லவுள்ளார்.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு கொடுக்கவுள்ளது தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

அண்மையில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் வெற்றியை அடுத்து அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]