மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் புதிய அரசு மலரும்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விரைவில் புதிய அரசு மலரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லை அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் வலியுறுத்தியதாவது, ‘

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த அரசுக்கு அக்கரையில்லை. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியாது. மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சிசெய்யப்பார்க்கின்றனர்.

நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்துறையினரும் இன்று பாதையில் உள்ளனர். இராணுவத்தினர், பிக்குகள், பல்கலைகழக மாணவர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்குத் தொடர்பில் பேசும் அமைச்சர்களின் செயற்பாட்டை பார்த்தால் மக்களுக்கு நன்குத் தெரியும்.

மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்த பயப்படுகின்றனர். இவர்கள் 2020வரை ஒருபோதும் தேர்தலை நடத்தப் போவதில்லை. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பூரண ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு விரைவில் அமையும்.

அதற்கு மக்கள் பூரண அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். அதன் காரணமாக அரசு அச்சின் தேர்தலை நடத்த பயப்படுகின்றனர். விரைவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு அமையும். அதனை அவர்களால் தடுக்க முடியாது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]