மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்த சட்டத்தினை அவரே மீறுகின்றார்- திசாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்த சட்டத்தினை அவரே மீறுகின்றார்- திசாநாயக்க. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ஜனாதிபதியாகும் போது அவருக்கே அக்கட்சியின் தலைமைப்பதவி வழங்கவேண்டும் என்ற சட்டத்தினை அறிமுகப்படுத்தியதே மஹிந்ததான் என திசாநாயக்க கூறினார்.மஹிந்த ராஜபக்ஷ

இன்று அவரே அதை மீறுகிறார் எனவும் கூறுகிறார். ஏனென்றால் அவரின் செயற்பாடுகள் அவ்வாறிருக்கிறது என பத்திரமுல்லையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்த மைத்திரிபால சேனநாயக்க, சூரியாராச்சி, சந்திரிகா குமாரதுங்க, அனுரா பண்டாரநாயக்க, ஆகியோர் அவரின் ஆட்சிக்காலத்திலேயே கட்சியை விட்டு விலக்கப்பட்டு இருந்தனர்.மஹிந்த ராஜபக்ஷ

இப்பொது அவர்கள் மறுபடியும் சு.கட்சியில் இணைந்துள்ளார். அந்தவரிசையில் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். முக்கியஸ்தர்களின் விலக்கல்களை உடைத்தெரிந்து பல சவால்களையும் கடந்துதான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை வெற்றிபெறவைத்துக் கட்சியை மீட்டெடுத்தோம்.

அதனால் தான் தலைமைப்பதவி ஜனாதிபதியிடமே இருக்கிறது. இவ்வாறான நிலைமையில் மஹிந்த ராஜபக்ஷ இன்றும்தான்தான் சு.கட்சியின் தலைவர் எனக் கூறிவருகிறார். அதுபோகட்டும் விடுங்கள், இப்போது நாங்கள் நினைப்பது கட்சியின் அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியையும், நாடையும் முன்னற்ற பாடுபட வேண்டும் என்பதனை அனைவரும் உணரவேண்டும் எனவும் தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷ

அவ்வேளையில், மஹிந்தவே கட்சியின் ஒருவர் ஜனாதிபதியாகும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி அக்கட்சியின் ஆலோசகராக செயல்படவேண்டும் சட்டதிருத்தத்தையும் கட்சியினுள் கொண்டுவந்தார் என்பதை மறந்துவிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]