மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் : எச்சரிக்கை விடுகிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ன

மஹிந்த ராஜபக்ஷ அரசின் மனித படுகொலைகள், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இலஞ்ச ஊழல் தொடர்பிலான அனைத்து உண்மைகளும் விரைவில் வெளியிடுவோம். அதன் பின்னர் பொது எதரணியின் ஆயுட்காலம் முடிவடைந்து விடும் என்று சுகாதார அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ
மஹிந்த ராஜபக்ஷ

எதிர்வரும் மேதினக் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை வீழ்த்துவோம் என்று சவால் விடுத்துள்ள பொது எதிரணியின் கருத்துக்கு பதிலளித்துள்ள அமைச்சர் மேலும் கூறியதாவது,

“சைட்டம் கல்வி நிறுவனம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சு கூறிய நான்கு யோசனைகளும் அரசின் யோசனைகளாகும். நாட்டு மக்களின் அனுமதியும் அதற்கு கிடைத்துள்ளது. குறித்த யோசனைகளை உயர்கல்வி அமைச்சும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இணைந்தே நடைமுறைப்படுத்தும்.

இதேவேளை, எதிர்வரும் மேதினத்தில் கொழும்பு கோல்பீசில் கூடும் கூட்டத்தின் பின்னர் அரச நிறுவனங்களை எதிரணி வீழ்த்திவிடும் என்று கூறியுள்ளமை அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகின்றது. பொது எதிரணியின் கூட்டத்தில் மக்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]