மஹிந்த ராஜபக்ஷ அணியினர் பாரிய வெற்றி?

உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டார ரீதியாக வெளியாகியுள்ள அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 மாவட்டங்களில் வெற்றிப் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் ஐதேக வெற்றி பெறும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இன்னமும் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெரும் வெற்றி கிடைத்திருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.