மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நாங்கள் தலைவராக்க வேண்டும் -பிரசன்ன ரணதுங்க.

தலைவராக்க வேண்டும்
prasanna ranatunga

மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நாங்கள் தலைவராக்க வேண்டும் -பிரசன்ன ரணதுங்க. இன்னும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும் தான் என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் தலைவரும், செயலாளருமே ஏற்கவேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமைத்துவம் மீது நம்பிக்கையில்லை. பாரிய அளவிலான உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறி வருகின்றனர். மக்களின் விருப்பத்துக்கேற்ப மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் நாங்கள் தலைவராக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவத்தில் அமர்த்தும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]