‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு இணைத்தலைவர் பதவி வழங்க முடியாது’

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத்தலைவர் பொறுப்பொன்றை வழங்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், கட்சியின் யாப்பின் படி இணைத்தலைவர் பதவி ஒன்றை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, கட்சியின் ஆலோசகர்களாக செயற்படும் வாய்ப்பு மாத்திரமே உள்ளதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், அவ்வாறு தீர்மானிக்கப்படுகின்ற நபர், பொது வேட்பாளராக இருக்கமாட்டார் எனவும் ரோஹன லக்ஷ்மன் பிரியதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]