‘மஹிந்த ராஜபக்ஷ’வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது

‘மஹிந்த ராஜபக்ஷ’வின் முகவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அரசின் முகவராக இருந்துகொண்டு எமது மக்களை கொலை செய்தவர்கள் காணாமல் ஆக்கச் செய்தவர்கள் தமிழ் மக்களின் நிலங்களையும் மக்களையும் பாதுகாக்கப் போகிறோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவருடனும் சோரம் போகாமல் தமிழ் தேசியத்தில் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுப்பதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் அலுவலகம் செவ்வாய்கிழமை (02) மாலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியில்; தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட அபிவிருத்தியுடன் எந்தக் கட்சியும் ஒப்பிட முடியாது. பலருக்கு பல விடயங்கள் தெரியாது.

நாங்கள் 30 வருடங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இருந்தவர்கள் சகோதர சமூகம் அந்த காலப் பகுதியில் எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அவர்களுடன் இணைந்து அவர்களது பகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.

நாங்கள் நிரந்தர தீர்வை நோக்கி செல்லும் போது அரசாங்கத்துடன் இணைந்து செல்லும் வாய்ப்பு இருக்கவில்லை. போராட்டத்தில் நாங்கள் பல இழப்புகளை எதிர்கொண்டோம். இன்று நாங்கள் முடிந்தளவு ஜனநாய ரீதியில் முன்னெடுப்புக்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவருடனும் சோரம் போகாமல் தமிழ் தேசியத்தில் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுப்பதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி எங்களுடன் இணைந்துள்ளது.

‘மஹிந்த ராஜபக்ஷ’வின் ஆட்சிக் காலத்தில் வெருகல் முதல் துறைநீலாவணை வரை பல்லாயிரக்கணக்கான நிலத்தை விற்றவர்கள் தமிழ் மக்களின் நிலங்களை மக்களைப் பாதுகாப்போம் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அரசின் முகவராக இருந்துகொண்டு வெள்ளை வனிர் பல இளைஞர்களை கடத்தி கொலை செய்தவர்கள் காணாமல் ஆக்கச் செய்தவர்கள் ஊடகவியாலர்களை , புத்திஜீவிகளை சுட்டுக்கொண்றவர்கள் பல்லைக் கழக மாணவர்களை காணாமல் ஆக்கியவர்கள் தற்போது தமிழ் மக்களைப் பாதுகாக்கப்போகிறார்களாம்.

கிழக்குப் பல்கைலக் கழக உருவாக்கத்திலிருந்து அதன் வளர்ச்சிக்காக உழைத்த துணைவேந்தவர் பேராசிரியர் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டிலே கடத்தப்பட்டார். அவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருந்த எமது கல்விச் சொத்து கிழக்குப் பல்லைக் கழக விரிவுரையாளர் கலாநிதி தம்பையா சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அப்பாவி இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான வீசா பெற கொழும்புக்குச் சென்று விடுதியில் தங்கியிருந்த வேளை அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ

மட்டக்களப்பிலே பல புத்தி ஜீவிகளை கடத்தி கொலை செய்ததை நாங்கள் மறக்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வரை காட்டிக்கொடுப்புக்களையும் கூட்டிக்கொடுப்பக்களையும்; அரசின் முகவர்களாக இருந்து செய்தார்கள்.

2015 ஜனவரி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஒரு ஊடகவியாளர் காணாமல் ஆக்கப்படவில்லை சுடப்படவில்லை யாரும் கடத்தப்படவில்லை. எங்கள் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழர்கள் கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகம் அதை வெளிவந்த உயர்தரப் பரீட்சை முடிவில் கணித பிரிவில் இகில இலங்கை ரீதியியில் முதலிட்ம் பெற்று யாழ் மாணவன் நிருபித்துள்ளான்.

மட்டக்களப்பில் ஏழுக தமிழ் பேரணியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவர்களின் படங்களை ஏந்தி வந்தபோது அதனை வீடியோ எடுத்து அரச புலனாய்வுத்துறைக்கு கொடுத்தவர்கள் இந்த தேர்தலிலே வாக்கு கேட்டு வருகிறார்கள். ஏறாவூர் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை விற்றுப் பிளைத்தவர்கள் வேட்பாளர்களாக வந்துள்ளார்.

எமது இருப்புக்களை காப்பாற்ற வேண்டுமானால் எமது மக்கள் அணிதிரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]