பத்திரிகையாளர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ச – படங்கள்

மஹிந்த ராஜபக்ச

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறிப்பிட்டுள்ளார்.

“நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை இந்த தற்போதைய அரசாங்கம் இழந்து விட்டது, புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி ஒன்று தோற்கடித்த வரலாறு இதுவரை இலங்கை அரசியலில் இடம்பெறவில்லை. இது ஒரு வரலாற்று வெற்றி” என்றும் மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]