மஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை- பிரபல முக்கியஸ்தர்களை ஆபாச வார்த்தைகளில் திட்டிதீர்த்த மஹிந்த??

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் முன்னாள் ஜனாதிபதியாக விளங்கிய மகிந்த ராஜபக்சவுடன் விரோதமான போக்கை கடைப்பிடித்து வந்தார்.

இதன் பின்னர் கடந்த மாதம் 26 ஆம் திகதி பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு அதிரடியாக மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்த பின்னர் மீண்டும் மஹிந்த தரப்புடன் இணைந்து கொண்டார்.

எனினும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மை ஆதரவை பாராளுமன்றில் நிருபிக்கும் முயற்சியில் பெரும் சிக்கல்கள் நிலவுகிறது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து மைத்திரிபால சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

எனினும் இந்த சந்திப்பில் வெறும் 86 உறுப்பினர்கள் மாத்திரமே சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனால் மஹிந்த ராஜபக்ச கடும் கோபம் அடைந்துள்ளார். இதனையடுத்து எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா உட்பட முக்கியஸ்தர்களை ஆபாச வார்த்தைகளால் மஹிந்த திட்டி தீர்த்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி மைத்திரியை பார்த்து “என்னால் 113 உறுப்பினர்களை திரட்ட முடியவில்லை என்றால் என்னை கெட்டவன் என கூறவேண்டாம்” என கோபமாக கூறிவிட்டு வெளியேறி சென்றுள்ளார்.

இது தொடர்பில் , கலந்து கொள்ளாத உறுப்பினர்களை தொடர்பு கொண்டு காரணத்தை அறிய முயன்ற போது அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மஹிந்த – மைத்திரி தரப்பில் மீண்டும் முறுகல் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]