மஹிந்த- மைத்திரிக்கு மனோ கொடுத்த நெத்தியடி- என்ன சொன்னார் தெரியுமா?

இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் குழப்பநிலையில் சிறுபான்மை கட்சிகள் தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை சேகரிக்கும் கடுமையான பிரயத்தனத்தில் மஹிந்த தரப்பும் மைத்திரி தரப்பும் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கியமாக சிறுபாண்மை கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் , இலங்கை முஸ்லீம் கட்சிகள் , மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவற்றின் உறுப்பினர்களை தமது பக்கம் ஈர்க்கும் வகையில் பக்க பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களை தமது பக்கம் எடுக்கும் முயற்சியில் மைத்திரி – மஹிந்த தரப்பு ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ ஒரு கருத்தை கூறியுள்ளார்.

அதாவது “நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாக கூறி விட்டோம். ” என அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது மஹிந்த தரப்பின் முயற்சிக்கு விழுந்த பாரிய அடியாக நோக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]