மஹிந்த மற்றும் அமைச்சரவைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கதாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான, நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் தலைமையில் இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்றன.

அதன்படி , குறித்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதிகளான பிரதமர் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷ உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]