“மஹிந்த மறந்து விட்டார்” – சரத் பொன்சேகா

தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மஹிந்த ராஜபக்ஷ மறந்து விட்டார் என்று, அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போர் வீரர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தற்போது, குற்றம்சாட்டுகிறார். ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்ததை மறந்து விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு முன்னர், முதலில் அவர் அதனைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]