மஹிந்த, கோட்டா யுகம் ஏற்படுத்தப்படும் – ஒன்றிணைந்த எதிரணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடாவிட்டால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே இதனைக் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவால் மீண்டும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட முடியாது என இவர்கள் கூறுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, இவர்கள் முட்டுக்கட்டை இடுவார்களாயின், யுத்தத்தை வெற்றி கொள்ள உந்துசக்தியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது நிறைவேற்று பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படுவார்.

மஹிந், கோட்டாபய யுகம் ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]