மஹிந்த, கோட்டாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆணைக்குழு

மஹிந்த, கோட்டா

‘மஹிந்த, கோட்டா’வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆணைக்குழு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் நிதி இழப்பை ஏற்படுத்தியமைக்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பரப்புரைக்காக தொலைக்காட்சியை கட்டணமின்றி பயன்படுத்தியதால், 102,158,058 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக மஹிந்த ராஜபக்ஷக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70ஆவது பிரிவின் கீழ் இது ஒரு குற்றம் என்றும் எனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]