மஹிந்த – இரா.சம்பந்தன் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பில் நேற்று இரவு நடைபெற்றபோது, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்விற்கு வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சுமார் 10 நிமிடங்கள் பிரத்தியேகமான முறையில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]