மஹிந்த ஆட்சி ஊழல் குறித்த அறிக்கை இன்று கையளிப்பு

மஹிந்த ஆட்சி

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவரான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன இந்த அறிக்கையை இன்று கையளிப்பார்.

இந்த ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 34 பிரதான ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தியிருந்தது.

பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த 1000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், எதிர்காலத்தில் எவ்வாறு இத்தகைய மோசடிகளைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான ஊழல் மோசடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]