மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு அவசர கடிதம்

கடந்த பொதுத் தேர்தலின்போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்படுவதாக, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினூடாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகவே செயற்படுவதாகவும் அந்த கடிதத்தத்தின் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கடிதம் சபாநாயகரிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]