மஹிந்த அணியில் வேட்பாளராக நடிகையிடம் பாலியல் இலஞ்சம்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த நடிகை ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

நடிகை மதுஷா ராமசிங்கவிடம் இந்த பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து நடிகை மதுஷா ராமசிங்க தெரிவிக்கையில், “நடிப்பைக் கைவிட்டு விட்டு அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன். உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட அணுகினேன்.

வேட்புமனுக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் பாலியல் இலஞ்சம் கோரினார்.

வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டுமானால் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துக் கூறினேன். அவர் சாதாரணமாக எடுத்துக் கொண்டு வருத்தம் தெரிவித்தார். ஆனால், குறித்த நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.