மஹிந்த அணியினர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை – ஹுருனிகா சாடல்

மஹிந்த ராஜபக்‌ஷ அணியினர் பாராளுமன்றத்தை மிருகக்காட்சிசாலை போல் செயற்படுவதற்கு சபைக்கு வராமல் இருப்பதே சபைக்கு மரியாதை என பாராளுமன்ற உறுப்பினர் ஹுருனிகா பிரேமசந்திர தெரிவிந்தார்.

இன்று எங்களால் அமைதியான முறையில் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

எமது அரசாங்கத்தின் போது ஊடக சுதந்திரம் இருந்தது அவர்களும் சுதந்திரமாக செயற்பட்டன. ஊடகங்கள் தலைநிமிர்ந்து செயற்படும் வகையில் நாங்கள் அவர்களின் கெளரவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். தற்போது ஊடகங்களின் நிலைமையை பார்க்கும்போது ‘உங்களுக்கு நலமா’ என்றே கேட்க தோன்றுகிறது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சபை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் நேரத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]