மஹிந்தானந்தவின் மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படும் வழக்கை வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொரளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி இந்த வீடு கொள்வனவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேன்முறையீட்டு மனு, குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, குறித்த மனுவை சமரசமாக முடித்துக் கொள்வது தொடர்பில் ஆலோசிப்பதாக இரு தரப்பு சட்டத்தணிகளும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு நீதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், அன்றைய தினம் இது குறித்த முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இருதரப்பு சட்டத்தரணிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]