மஹிந்தவை கடுப்பாக்கும் சத்தியாக்கிரகம்?

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக விரோதமானது, அது அமைக்கப்பட்ட விதம் தவறானது என குறிப்பிட்டு, அரசுக்கு எதிரான சத்தியாக்கிரக போராட்டமொன்று கொழும்பில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தம்பர அமில தேரர், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொழும்பு விகாராமதேவி பூங்கா பகுதியில் இந்த சத்தியாக்கிரகம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்திற்கு முன்னர் ஊடகங்களிடம் பேசிய தம்பர அமில தேரர்- “சர்வதேச நாடுகள் உங்களது நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மாலைதீவு , சுவாசிலாந்து நாடுகள் கூட இந்த அரசாங்கத்தை ஏற்குமா என்பது சந்தேகம்தான். நாட்டில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே சதியாக்கிரகத்தில் இறங்குகிறோம்.” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]