மஹிந்தவை எச்சரிக்கும் தயாசிறி ஜயசேகர??

மகிந்த ராஜபக்ச சு.கவின் அங்கத்துவர் என்றே கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்படுகிறார். அவர் சு.கவுடன் இணைந்துதான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் பறிபோய்விடும் என்று சு.கவின் பொதுச் செயலானர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் பலமானக் கூட்டணியொன்றை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியை அடுத்துவரும் எந்தவொரு தேர்தலிலும் வீழ்த்துவோம். பலமான கூட்டணியை அமைத்தே சு.க. எப்போதும் தேர்தலை சந்தித்துள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்ச சு.கவின் அங்கத்துவர் என்றே கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்படுகிறார். எனவே, அவர் சு.கவுடன் இணைந்துதான் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் பறிபோய்விடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]