மஹிந்தவுடன் அமைச்சர்கள் இரகசிய சந்திப்பு???

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் 8 பேர், நேற்று (07) மாலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இச்சந்திப்பின்போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைககள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

mahinda rajapaksa

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கிடையேயான திட்டங்கள் பல நிறைவுக்கு வரவுள்ளன.

அத்துடன், நல்லாட்சியிலிருந்து வௌியேற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் 18 பேர் தயாராக உள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன.

இந்நிலையில், நேற்று (07),  முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து சந்திப்பு நடத்திய அமைச்சர்கள், குறித்த 18 பேரில் உள்ளடங்குபவர்களில் சிலராவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]