மஹிந்தவுக்கு ‘நோ’ சொன்ன மங்கள…

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போதைய அரசாங்கத்துக்கு உதவி வழங்குவதற்குத் தயாரெனத் தெரிவித்த போதிலும், அவ்வாறான உதவியேதும் தேவைப்படவில்லை என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

அண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி – பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்படி ஆள்வது என்பது தொடர்பாக, உங்களின் ஆலோசனை, நிச்சயமாக வேண்டாம். நாங்கள் துப்பரவு செய்வதற்காக, நீங்கள் விட்டுச் சென்றுள்ள குப்பையைப் பாருங்கள்” என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]