மஹிந்தவுக்கு தமிழ் கூட்டமைப்பின் ஆதரவளிக்காமையின் காரணத்தை வெளியிட்ட சம்பந்தன்

கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட ரணில் தலைமையிலான அரசு ஜனாதிபதி மைத்திரியால் கலைக்கப்பட்டு மஹிந்த ராஜபாக்ஸை புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

எனினும் புதிய பிரதமர் ராஜபக்ச மேல் கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்கும் ஆதரவு மஹிந்த பக்கம் இல்லாத காரணத்தால் நெருக்கடியில் இருந்து தப்ப , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சிறப்பு அதிகாரம் மூலம் பாராளுமன்றத்தை கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு பிரதான காரணமாக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவு மஹிந்தவுக்கு கிடைக்காமையே என பல தரப்பினர் கூறி வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களை தனது பக்கம் எடுக்க மஹிந்த எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தமையே மைத்திரிபால பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுக்க நேரிட்டது.

இந்நிலையில் , ஏன் தமிழ் கூட்டமைப்பு மஹிந்தவை ஆதரிக்கவில்லை என்பதை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழர்களுக்கு ஒன்றும் நடைபெறவில்லை எனவும் நாட்டில் கடன்சுமையை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையின் எந்தவொரு கட்சிக்கும் இல்லாத சர்வதேச ஆதரவு தமிழ் கூட்டமைப்புக்கு உள்ளதாகவும், தமிழ் மக்களின் ஒற்றுமையும், ஒருமித்த செயற்பாடுமே கூட்டமைப்பின் பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]