மஹிந்தவில் இல்லத்தில் விசேட கலந்துரையாடல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகவும், நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதிலிருந்து அதுதொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் அந்தக் கட்சியினுள் இரகசிய கலந்துரையாடல்கள் நடாத்தப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்னும் பல பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதன் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் குறித்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]