‘மஹிந்த’வின் தேர்தல் பதாதைகளை அகற்றிய பொலிஸார்

மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் படங்களுடன் கூடிய தேர்தல் பரப்புரைப் பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

மதவாச்சியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைப் பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை பொலிஸார் அகற்றியுள்ளனர்.

தமது கட்சியைச் சாராத தலைவர்களின் படங்களை பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே இவற்றை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், இதுகுறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மதவாச்சி அமைப்பாளர் நந்தசேன, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]