மஹிந்தவின் தலைமையில் பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஒன்றிணைகிறது??

பொதுஜன பெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

நேற்று (07) இரவு நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ​ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இரவு 7 மணியளவில் கூடியது.

முன்னாள் ஆலோசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் வரவில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச இதன்போது தெரிவித்திருந்தார்.

மேலும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலேயே புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

குறித்த புதிய கூட்டணியானது இடம்பெறப்போகும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றித்துச் செயற்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]