மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க துணைபோக மாட்டோம் – ஜே.வி.பி

எந்தவொரு நபரினதும், குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கான நகர்வுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்காது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான மஹிந்த அமரவீர நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

“முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகள் நியாயமற்ற வகையில் பறிக்கப்பட்டது. எனவே எவருடைய குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் நாங்கள் விரும்பவில்லை. தவறு செய்தவர்களை சட்டரீதியாக கையாளலாம்.” என்று தெரிவித்தார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவினதோ அல்லது வேறு எவருடையதோ குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு, தமது கட்சி துணைநிற்காது என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் நேற்று தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]